பி.எம்.எம்.ஏ.காதர்-
முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவினால் சம்மாந்துறை கல்வி வலய பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு கற்றல் உபகரணங்கள்,புத்தகப் பை மற்றும் பாதணிகள் வழங்கிய நிகழ்வு சனிக்கிழமை(23-01-2016)சம்மாந்துறை அல்-அர்சத் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை தொழிற் பயிற்ச்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பி.நழீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,புத்தகப் பை மற்றும் பாதணிகளையும் வழங்கிவைத்தார்.
சம்மாந்துறை ஸ்டார் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதிப் பொறுப்பதிகாரி அத்துலக்முதலி,சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.அன்சார்,முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சிராஸ் ஆகியோருடன் அதிபர்களும், பெற்றோர்களும்,முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


