எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாயில் கடந்த வருடம் அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (1) தீர்ப்பளித்தார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த முகம்மட் சபீக் வயது (28) என்பவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் கந்தளாவிலிருந்து கிண்ணியாவுக்கு அனுமதிப்பத்திரமின்றி எட்டு முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற போது கந்தளாய் போக்குவரத்துப் பொலிஸார் கைது குறித்த நபருக்கேதிராக கந்தளாய் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த வழக்கிற்கே குறித்த தண்டப்பணத்தினை செலுத்துமாறு நீதிவான் தீர்ப்பளித்தார்.
