கல்முனை மக்களை கிணத்துத் தவளைகளாக வாழ வைக்கவா தமிழ் தலைமைகள்விரும்புகின்றனர்? – ஹரீஸ் கேள்வி



ஹாசிப் யாஸீன்-

ல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும் தடுக்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள்கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை கிணத்துத் தவளைகளாக உலக நடப்பின்றிஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒரு இருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவாவிரும்புகின்றார்கள்? எனக் கேட்க விரும்புகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 06க்கான அங்குரார்ப்பணநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே விளையாட்டுத்துறைபிரதி அமைச்சர் இவ்வாறு கேள்வி எழுப்பி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட சிலர் இன்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி வேண்டாம்முஸ்லிம் மக்கள் மட்டும் அவர்களுடைய பிரதேசத்தை மட்டும் அபிவிருத்தி செய்துகொள்ளுங்கள் என்று அறிக்கை விடுகின்றார்கள்.

கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் பிரதேசங்களை விட்டு விட்டு முஸ்லிம்பிரதேசங்களை மட்டும் அபிவிருத்தி செய்தால், நாளை பாராளுமன்றத்தில் நகர அபிவிருத்திமற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா உரியது,முஸ்லிம் மக்களுக்கு மட்டுமா அபிவிருத்தி, தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி இல்லையா, தமிழ்மக்களை புறக்கணித்து விட்டார்கள் என்று பேசுவார்கள்.

கல்முனை மாநகர அபிவிருத்தி எல்லாச் சமூகங்களையும் சென்றடைய வேண்டும்என்பதற்காக எல்லோரையும் அரவணைத்து இந்த அபிவிருத்தியைச் செய்ய வேண்டும் எனமுயற்சித்து வருகின்றோம்.

அரசின் நரக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை,ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களின் நகரங்கள் சர்வதேச தரத்திற்கு ஒப்பானமுறையில் சகல வசதிகளுடன் கூடியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்கள்சகல வசதிகளையும் பெறுகின்றபோது, கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை மட்டும்தடுக்கின்ற கல்முனையின் தமிழ் அரசியல் தலைமைகள் கல்முனையில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் கிணத்துத் தவளைகளாக உலக நடப்பின்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஒருஇருண்ட குக்கிராம மக்களாக வாழ வைக்கவா விரும்புகின்றார்கள்? எனக் கேட்கவிரும்புகின்றேன்.

கல்முனையின் அபிவிருத்தியை பிற்போடுவதற்கு சில நாசகார சக்திகள் திட்டமிட்டுசெயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக எமது தலைமை தமிழ்த் தலைமைகளுடன்பேசியிருக்கின்ற நிலையில் சிலரின் இந்த நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம்மக்களுக்கிடையில் மீண்டும் மனக்கசப்புக்களை தோற்றுவிக்கும் என கவலைப்படவேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -