
எஸ்.என்.றிஸ்லி-
அக்கரைப்பற்றிலிருந்து யு.எல்.எம்.றுபைஸின் இயக்கத்தில் வெளியாகும் ”போனும் நானும்” திரைப்படத்தினுடைய அறிமுகப்பாடல் வெளியீட்டு நிகழ்வு TFC மண்டபத்தில் 2016.01.05 மாலை 07.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக ஏ.எல்.ஜபீர், Dr ரொமென்ஸ், ராஜ் குமார், அப்துல் றசாக், ஆசு கவி அன்புடீன், கவிஞர் பாலமுனை பாறுக், உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இத்திரைப்படம் சம்மந்தமான தகவல்களை ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாஜித் அவர்களும் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் யு.எல்.எம்.றுபைஸ் அவர்களும் பகிர்ந்து கொண்டனர்
இவ்வருடம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.








