கொடுங்கோன்மை காரணமாக உணவின்றி பட்டினியால் மரணத்தை எதிர் நோக்கும் முஸ்லிம் மக்கள்..!

சிரியாவில் மதாயா (Madaya) பகுதியை சேர்ந்த 40,000 மக்கள் சிரிய அதிபர் ஷியா கொடுங்கோலன் அசாத்தின் கொடுங்கோன்மை காரணமாக உணவின்றி பட்டினியால் சிறுகச்சிறுக மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

சிரிய கொடுங்கோல் அரசினால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகளை அதிகரிக்கப்பட்டு, மக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டு, வெளியில் இருந்து வரும் உணவுகள் உதவிகள் தடுக்கப்பட்டு கடந்த 2015 July இல் இருந்து 6 மாத காலமாக இப்போது வரை முஸ்லிம் மக்கள் பசியால் வாட விடப்பட்டு பசிக் கொடூரத்தால் சாகடிக்கப்பட்டு வருகின்றனர். 

இங்கு வாழும் நம் உறவுகளுக்கு எரிபொருட்கள் இல்லை, விறகுகள் இல்லை ; மின்சாரம் இல்லை; உணவு உற்பத்திக்கும் அரசு தடை. கடந்த 6 மாதங்களாக உயிருடன் பசிக் கொடுமையால் மக்கள் வாடுகிறார்கள். 

உயிர் வாழ நமது சகோதரர்கள், சகோதரிகள் உண்ணும் உணவுகள்: பச்சை இலைகள், பூச்சிகள், அழுக்கு குப்பைகள், பூனைகள்! 

கடந்த December 22 / 2015 இல் அரிசி 1kgவின் விலை = 85 $ 
கடந்த January 5 / 2016 இல் அரிசி 1kgவின் விலை = 250 $. 20,000 மக்கள் இன்னும் சில வாரங்களில் உயிரிழப்பார்கள் என்று நம்பப்படுகிறது. 

இம்மக்கள் இக் கொடுமைக்கு ஏன் உள்ளாகிறார்கள் தெரியுமா? 

சத்திய மார்க்கம் இஸலாமே! அல்லாஹ் போதுமானவன்..

முஸ்லிம்கள் எனும் ஒரு காரந்த்திற்காகவே இந்த கொடுமை அவர்களுக்கு.. ஒரு மார்க்கம் பலராலும் பல மதத்தவர்களாலும் பலவிதமாக முழு உலகமும் விமர்சிக்கப்படுகிறது.

ஒரு மார்கத்தை பின்பற்றும் மக்கள் உலகில் பலராலும் கொடுமைக்குட்படுத்தப்படுகிறார்கள் என்றால்.... ஒரு மார்க்கம் அத்தனை விமர்சன கணைகளுக்கும் மடியாமல், அழிந்து போகாமல் மனித சனத்தொகை அதிகரிப்பை விட பல மடங்கு வேகத்துடன் அதிகரிக்கிறது என்றால்... அது இஸ்லாம் மட்டுமே!! 

"அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்." (திருக்குர்ஆன் 9:32)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -