முஸ்லிம் காங்கிரசுக்கு கட்சி தாவிய சமீம் தெரிவித்த விசேட உரை..!

முஹம்மட் வஹாப்-
ம்பாரை மாவட்ட மக்களின் பிரச்சிணைகளைக் கருத்திற்கொள்ளாத கட்சியின் தலைமைக்குப் பின்னால் பயணிப்பதனைவிட முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கட்சியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து செல்வது மேல்...கே.எல் சமீம் தெரிவிப்பு 

கிழக்கு மாகாணத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்காக உழைத்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் பிரதி தவிசாளர் பதவியைக்கூட பாதுகாத்துக்கொள்ள முடியாத கட்சியின் தலைவர் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ளப் போகிறார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காம பிரதேச கொள்கை பரப்புச் செயலாளராகவிருந்து கட்சி தாவிய கே.எல் சமீம் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காம பிரதேச கொள்கைபரப்புச் செயலாளராக செயற்பட்ட கே.எல். சமீம் அண்மையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது அம்பாரை மாவட்டத்தில் கால் பதித்துக்;கொண்டபோது இம்மக்களின் தாகங்களை தீர்க்கும் என்ற எண்ணத்தோடு அதன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவனாக மட்டுமன்றி இறக்காம பிரதேசத்தின் கொள்கைபரப்புச் செயலாளராகவும் கடந்த காலங்களில் செயற்பட்டேன். 

ஆனால் எமது மக்கள் எதிர்பார்த்ததனைப் போன்று அக்கட்சியின் கடந்தகால செயற்பாடுகள் அமையவில்லை இருந்தாலும் அக்கட்சியின் தலைமை அம்பாரை மாவட்ட மக்களை ஒரு பொருட்டாக கருதாமல் செயற்படுவதனையும் அவதானித்த நான் இக் கட்சியை விட்டு விலகி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைந்துகொண்டேன். 

கடந்த காலங்களில் நல்லாட்சிக்காக உழைத்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பதவியைக்கூட பாதுகாத்துக்கொள்ள முடியாத தலைமை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக்கொள்ளப் போகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக செயற்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் அக்கட்சியை கிழக்கு மாகாணத்தில் காலூன்றச் செய்வதற்கு அரும்பாடுபட்டவர். 

அதிலும் விசேடமாக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்களை கட்சியோடு இணைப்பதற்கும் காரணமாகவிருந்தவர். இவ்வாறானவர்கள் கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்டமை கவலையான விடயமாகும். கட்சிக்குள்ளே இருந்துகொண்டு சுபையிரை வெளியேற்றியோரையும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரான சுபையிரின் வெளியேற்றத்தினையும் ஆராய்ந்து தீர்த்து வைக்கமுடியாத கட்சியின் தலைமை எவ்வாறு சாதாரன மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்துவைக்கப்போகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாறுக் போன்றோர் கட்சியை விட்டு வெளியேறினர் அதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும் முன்னால் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் என பலரும் வெளியேறியுள்ளனர் இன்னும் பலர் வெளியேறவுள்ளதாக அறிகின்றேன். 

விசேடமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதற்கு தலைமையோடு நெருக்கமாகவிருந்து பல கஸ்டங்களை எதிர்நோக்கி கட்சியை அமைத்த கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்டை கூட கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு கட்சியின் தலைமை சிந்திக்குமளவிற்கு அவர்களின் மனோநிலை மாறியிருக்கிறது கட்சியினை ஸ்தாபிப்பதற்கும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைத்த வை.எல்.எஸ் ஹமீட் மற்றும் சுபையிர் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவதனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தனது கட்சிக்கு கிடைக்கின்ற தேசியப்படடியலை அம்பாரை மாவட்டத்திற்கு வழங்குவேன் என்று ஊடகங்களில் இந்த நாட்டு மக்கள் மத்தியில் வாக்குறதியளித்த தலைமை இறுதியில் அம்பாரை மாவட்ட மக்களையும் அன்றைய தினம் அந்நிகழ்ச்சியை விழிப்பாக பார்த்துக்கொண்டிருந்த இலங்கை வாழ் மக்களையும் ஏமாற்றியிருக்கிறது அதேபோன்றுதான் கரையோர மாவட்டம் பெறாமல் அமைச்சுப்பதவிகளை பெறமாட்டேன் என வீராப்புப் பேசிய தலைமை இறுதியில் சகலதனையும் மீறியே செயற்பட்டது. இவைகள் யாவும் வாக்குகளை இழக்கு வைத்து தலைமையினால் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்களாகும் இவைகளை சற்று பின்னோக்கிப் பார்த்த எமது முஸ்லிம் சமூகம் இன்று இக்கட்சிமேலும் தலைமை மீதும்; நம்பிக்கையிழந்து வருகின்றது.

குறிப்பாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் இதயம் என போற்றப்படும் அம்பாரை மாவட்டத்தில் சுமார் 33000 வாக்குகளை பெறுவதென்பது மிகவும் கஷ்டமான காரியமாகும் இருந்தாலும் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும்; தலைமை நம்பி வாக்களித்த மக்கள் நடுத்தெருவில் நிற்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. தற்போது இவர்களுடைய பிரச்சிணைகளை தீர்த்துவைப்பது யார்? மக்கள் நம்பிய யாரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது கட்சித் தலைமையை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை ஆகவே மக்களுடைய பிரச்சிணைகளை யாரிடம் சென்று தீர்த்துக்கொள்வது.

இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ச்சியாக இக்கட்சிக்குள் இருந்துகொண்டு அங்கீகரிக்க முடியாது. 

கடந்த ஆட்சியில் சுகபோகங்களை அனுபவித்த தனிநபர்களை மீண்டும் இக்கட்சி திருப்திப்படுத்துவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகின்றது மக்களால் புரக்கனிக்கப்பட்டவர்களுக்கு பதவிகளை வழங்கி அவர்களின் வருமானத்தினை ஈட்டிக்கொள்வதனை விடுத்து நம்பிக்கையோடு வாக்களித்த அம்பாரை மக்களின் பிரச்சிணைகளை தீர்த்துக்கொள்வதற்கு கட்சியின் தலைமை முன்வரவேண்டும். 

அண்மையில் இறக்காம பிரதேச மக்கள் அமைச்சரை சந்தித்து இம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக சம்பளமோ வாகனமோ அற்ற ஒரு இணைப்பாளர் பதவி கேட்டும் அதனைக்கூட தறமறுத்த தலைமையின் பின்னால் செல்வதற்கு இனியும் இம்மக்கள் தயாரில்லை என்பதனை கூறிக்கொள்வதோடு இவ்வாறான செயற்பாடுகள் இங்குள்ள மக்களையும், அமைப்பாளர்களையும் சோர்வடையச் செய்துள்ளது. 

எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும் இக்கட்சிக்குப் பின்னாலும் அப்பட்டமாக பொய்களை பேசுகின்ற தலைமைக்குப் பின்னாலும் பயணிப்பதனை விலக்கிக்கொள்வதோடு முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கட்சியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் பலப்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -