நிந்தவூரில் மதீனா விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகம் தெரிவும் : தேசிய ரீதியிலும் சாதனை...!



சுலைமான் றாபி-

நிந்தவூரில் சிறப்பாக இயங்கிவரும் மதீனா விளையாட்டு கழகத்தின் 2016ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவும், மீள் புனரமைத்தலும் அண்மையில் நிந்தவூர் அல்- அதான் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அன்சார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட் கலந்து கொண்டதோடு கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கழகத்தின் புதிய தலைவராக உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அன்சார், உபதலைவர் A.பர்சாத் செயலாளராக எஸ்.எம்.இஸ்மத் , பொருளாளராக ஷிம்றி அஹமட் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கானோர் கள் தெரிவு செய்யப்பட்டதோடு, ஏனைய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமானது கடந்தகாலத்தில் 18 உடற்கல்வி ஆசிரியர்களை விளையாட்டுத் துறைக்கு உள்வாங்கியதோடு, ஒரு மாவட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கையின் தரைப்படை விளையாட்டுப் பிரிவிற்கு இக் கழகத்திலிருந்து 04 பேர் தெரிவு செய்யப்பட்டதோடு இந்த கழகத்தினைச் சேர்ந்த இஸட்.எம்.ஆசிக் அண்மையில் இடம்பெற்ற 41வது இலங்கையின் தேசிய விளையாட்டுப் போட்டியின் பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் 40.51 மீற்றர் தூரம் எறிந்து தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தினை பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -