வில்பத்து வன அழிப்புக்கு காரணம் : பஷில் - பொதுபல சேனா

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து வன அழிப்பு நடந்ததாகவும், அதன் பின்னணியில் இருந்து பசில் ராஜபக்ச செயற்பட்டதாகவும் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது குறித்து அறிவித்து சுமார் 5 கடிதங்களை அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் உள்ள அடிப்படைவாத குழுக்கள் குறித்து தாம் 2 வருடங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியதாக கூறியுள்ள அவர், தமது அமைப்பு இது பற்றி சுட்டிக்காட்டிய போது, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள மதரசாக்களில் குர் ஆனை மாத்திரம் படிக்குமாறு கற்பிக்கின்றனர். முஸ்லிம்களை உடையிலும் உணவு பழக்க வழக்கத்திலும் இலங்கை சமூகத்தில் இருந்து மாற்றி வருகின்றனர்.

முஸ்லிம்கள், சிங்களவர்களுடன் இணைய வேண்டும் எனவும் டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.ஆனால் இதுவரை வில்பத்து விவகரம் பற்றி அமைச்சர் ரிசாட் பதியுதீனையே மாட்டிக்கொண்டிருக்கின்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -