காலி முகத்திடலில் குளித்துக்கொண்டிருந்த முஹம்மட் அர்ஷாட் கடலில் மூழ்கி பலி..!

டல் மற்றும் வாவியில் குளித்த மற்றும் தவறி விழுந்ததில் மூவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

காலி முகத்திடல் கடலில், கடந்த 10 ஆம் திகதி மாலை 5 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த மாளிகாவத்தையைச் சேர்ந்த 16 வயதான மொஹமட் அர்ஷாட் என்ற இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, காலி முகத்திடலில் கடலில் மூழ்கியவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு வந்திருந்த, மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதான சிந்தக சமீர என்பவர், காலிடறி, கடலுக்குள் விழுந்து பலியாகியுள்ளார்.

இதேவேளை, அம்பலாங்கொடை பிரதேசத்தில், வாவியொன்றில் குளித்துக்கொண்டிருந்த 63 வயதான நபரொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -