சவூதி மீதான அச்சுறுத்தலுக்கு பாகிஸ்தான் பதிலடி..!

வூதி மற்றும் அதன் பிராந்தியங்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்கு பாகிஸ்தானிடமிருந்து பலமான பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானின் இராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சஊதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகம்மத் பின் சல்மான் பாகிஸ்தான் இராணுவ தளபதியை சந்தித்து பேசிய போதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

சவூதி இளவரசர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அதன் போது இரு நாடுகளுக்கிடையிலான வரலாறு, கலாச்சார, மத ரீதியான விடயங்களில் இரு நாட்டு மக்களும் இறுக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் மக்கள் சவூதி அரேபியா மீது மிகந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அதன் மன்னர் சல்மானின் நடவடிக்கைகள் மீது மக்கள் மதிப்பு வைத்துள்ளதாகவும் சவூதி இளவரசர் சுட்டிக் காட்டினார். 

இதன் போது கருத்து தெரிவித்த நவாஸ் ஷரீப் சஊதி அரேபியாவின் இறைமைக்கு எதிராக வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் பாகிஸ்தான் மக்கள் எப்போதும் சவூதி அரேபியாவுடன் கைகோர்த்து நிற்பார்கள் என்று தெரிவித்தார்.

சவூதி பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தானின் இராணுவ பலத்தினை மெச்சியதுடன் சஊதி அரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்தார்.

அண்மையில் ஷீஆ மதகுரு நிம்ர் அல்-நிம்ருக்கு சஊதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை அடுத்து ஈரானுடன் ஏற்பட்டுள்ள முருகல் நிலைமையினால் சஊதி அரேபியா மற்றும் அதனது கூட்டணி நாடுகள் ஷீஆ ஆதிக்க நாடான ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அல்லது குறைத்துக் கொள்வதாக அறிவித்தபின்பே சஊதி பாதுகாப்பு அமைச்சரின் இந்த பாகிஸ்தான் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -