காத்தான்குடி தேசிய சுன்னத் வல் ஜமா அத் இன் ஏற்பாட்டில் காத்தான்குடில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள மாபெரும் மீலாதுன் நபி விழாவிற்கு எதிராக இன்று ஜும் ஆத் தொழுகையினை தொடர்ந்து பொதுமக்கள் ஏற்பாட்டில் பாறிய ஆர்ப்பாட்டம் ஒன்று காத்தான்குடி கலாச்சார மண்டம் முன்றலில் இடம் பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுகலந்துகொண்டோர் "மீலாத் விழா என்பது சீயாக்கள் உறுவாக்கி வழிகேடு"," மீலாத் எனும் பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான அநாச்சாரம்" என எழுதப்பட்ட வாசகங்களை ஏந்திருந்தனர்..
இந் நிகழ்வினை இரத்து செய்யுமாறு கோரி நகரசபை செயலாளருக்கு மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பிரிவினரின் இஸ்லாம் சார்ந்த மாற்றுக்கருத்தினால் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவினால் " இஸ்லாத்தை விட்டு வெளியேரியவர்கள்"என பத்வா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்பொழுது அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -