எப்.முபாரக்-
சாராயம் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று மனைவியை பொல்லால் தலையில் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.றிஸ்வான் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
சேனையூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த பொன்னையா வேலாயுதம் வயது(51) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டில் மனைவி உணவு சமைத்து வைக்க வில்லை என்ற காரணத்தினால் சாராயம் குடித்துக் சென்று பொல்லால் மனைவியைத் தலையில் தாக்கி காயப்படுத்திய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் மனைவி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேக நபரை சம்பூர் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(10)கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
