ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று இராஜினாமாச் செய்துள்ளார் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சகோதரரான இவர், தற்காலிக அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையிலே இன்று மாலை டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், தனது இராஜினாமாக் கடித்தினை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரின் ராஜினாமாவை தொடர்ந்து அடுத்து யார் நியமிக்கப்படுவார் எனும் கேள்வியோடு கட்சி வட்டாரம் ஆவலுடன் காத்திருகின்றன ..
அடுத்தது யார் ...? விடை காண சற்று காத்திருங்கள்
