கொழும்புக்கு தனி வாகனத்தில் செல்வோரின் கவனத்திற்க்கு..!

எஸ்.எம்.சன்சீர்-
கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை (டுப்ளிகேசன் வீதி) ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தெஹிவளை மேன்பாலம் தொடக்கம் தலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேடி சுற்றுவட்டம் வரையும் எந்த இடத்திலாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

குறித்த பிரதான வீதிகளுக்கு மேலதிகமாக அந்த பாதையுடன் தொடர்புபடும் கிளை வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகங்களுக்கும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல்கள் இன்று அப்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தலுக்கு அமைய மோட்டார் சைக்கிளில் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 10 ரூபாய் அறவிடப்படுவதாகவும், கார் ஒன்று ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 30 ரூபாய் அறவிடப்படுவதாகவும், முச்சக்கரவண்டி ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 20 ரூபாய் அறவிடப்படுவதாகவும், அனைத்துவிதமான லொறி வகைகளும் ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்க 50 ரூபாய் அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை இத்திட்டத்தை இன்று தொடக்கம் முன்னேடுக்கவுள்ளத்து.

மிகவும் சிறந்த சாலை ஒழுக்கம் மற்றும் மிகவும் முன்னேற்றகரமான வாகன தரிப்பிடம் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைப்பத்து இத்திட்டத்தின் நோக்கம் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தினம் தோறும் கொழும்பு காரியாலயங்களில் தொழில் நிமித்தம் வருகை தரும் வாகன உரிமையாளர்கள் இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் காரணமாக தாம் தினமும் 250 ரூபாய் செலவிடவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் போக்குவரத்து வடிவமைப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சபையின் இயக்குனர் பொறியியல் K.A.D.N. விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்;

மக்கள் நீண்டகாலமாக ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைக்கா பழகாமல் இருப்பதே எமது எதிர்பார்ப்பு. தற்பொழுது தினமும் தொழிலுக்காக கொழும்பு வரும் மக்கள் காலையில் வந்ததால் மாலை வரை ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு செல்ல பழகியுள்ளனர். இதனால் சாதாரண மக்கள் தமது தேவைகளுக்கு கொழும்பு வந்ததால் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாமல் உள்ளது.

ஆகவே இந்த புதிய திட்டத்தின் ஊடாக அவர்கள் வாகனங்களை நிறுத்தி வைக்கும் காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். காலையில் வந்து மாலை வரை நிறுத்தி வைப்பவர்களுக்கு இதன் மூலம் அசவ்கரியங்கள் ஏற்படும். என்றாலும் அதனை எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -