தமிழ் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி..!

னா­தி­ப­தியும், அரசும் முஸ்­லிம்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றாத நிலையில் ஒரு­வ­ரு­டத்தைப் பூர்த்திசெய்­துள்ளது என குற்றம் சாட்டும் ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் மொஹமட் மிப்லார், இந்­நிலை தொடர்ந்தால் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் சிறு­பான்மை இன­ மக்கள் அர­சுக்கு ஆத­ரவு வழங்­க­மாட்­டார்கள் என்றும் தெரிவித்­துள்ளார்.

இது தொடர்­பாக ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் மொஹமட் மிப்லார் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்றும், குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நடவடிக்கைகள் முன்­னெடுத்த பொது­ப­ல­சேனா தடை­செய்­யப்­ப­டுமென்றும் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. 

அத்­துடன் வடக்கில் முஸ்­லிம்­, தமிழ் மக்கள் சுதந்­தி­ர­மாக மீன்­பி­டிக்கும் தொழிலை முன்னெ­டுக்­கலாம். அதற்கு தடைவிதிக்­கப்­ப­ட­மாட்டாது என்றும், இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்­களில் குடி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்றும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு வாக்­கு­று­திகள் அள்ளி வீசப்­பட்­டன.

ஆனால் இன்று இவ்­வாறு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எதுவும் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் ஒரு வருடம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மாறாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றார். 

பிர­த­ம­ராக ரணில்­ விக்­கி­ரமசிங்க பத­வி­யேற்றார். இந்த இரண்டு விட­யங்கள் மட்டும் தான் நிறை­வே­றி­யது. அதை­வி­டுத்து தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இலங்கை அர­சி­யலில் சிறு­பான்மை இன மக்­களை ஏமாற்றி பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஆட்­சியை கைப்­பற்­று­வதே மர­பாக இருக்­கின்­றது. இன்றும் அதே மர­பையே பின்­பற்­று­கின்­றது. ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யாகும் நிலையில் முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர்.

எனவே இனி­மேலும் சிறு­பான்மை இன மக்­களை ஏமாற்றி அர­சியல் செய்­வது கைவி­டப்­பட வேண்டும். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இத்தேர்­தலில் எமது மக்­களை ஏமாற்ற முடி­யாது. எனவே இனியும் ஏமாற்ற முயற்­சிக்க வேண்டாம். ஒரு­வ­ருடம் பூர்த்­தியின் பின்­ன­ரா­வது முஸ்லிம்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவும்.

தாஜுதீனின் கொலையும் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இன்று அக் கொலையும் மூடி மறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது என்றும் மொஹமட் மிப்லார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -