கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களுக்கான வர்ண விருது வழங்கும் நிகழ்வு..!

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கழக வீரர்களுக்கான வர்ண விருது வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை ( 6 ) கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் எம்.எம்.ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வர்ண விருது வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ. கப்பார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களுள் கிறிக்கட் போட்டிகளின் போது தமது திறமைகளை வெளிக்காட்டி கழகத்திற்கு பெருமை சேர்த்த பல விளையாட்டு வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வர்ண விழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் கழக உறுப்பினர்களுடன் இணைந்து கழக செயலாளர் ஏ.எல்.எம்.அஸீம் மேற்கொண்டிருந்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -