வெலிகடை சிறைச்சாலைக்குள் ஞானசார தேரரின் நிலை..!

திர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு வெலிகடை சிறைச்சாலைக்குள் விஷேட பாதுகாப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதர கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் இல்லாத வேறு ஒரு இடம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைசாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் சந்தேக நபர்கள் மற்றும் முஸ்லிம்களால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவருக்கு விஷேட பாதுகாப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதர சந்தேக நபர்கள் தொடர்பில்லாத தனி இடம் சிறைச்சாலைக்குள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சிறைச்சாலை மருத்துவமனைக்கு அவரை மாற்றுவதற்கு அதிகாரிகள் விரும்பியதாகவும், ஞானசார தேரர் அதனை மறுதலித்ததாகவும் சிங்கள மொழி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -