டாக்டர் ஹாபிஸ் சம்மந்தமான செய்தியில் எந்த உண்மையும் இல்லை -அமைச்சர் ரிஷாத் மறுப்பு



அலுவலக செய்தியாளர்



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹாபிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணையவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளாதாகவும்  இன்று  (07)செய்திகள் வளிவந்தன.
குறித்த செய்தியின் உண்மைத்தன்மைகளை அறிவதற்காக இம்போட் மிரர் ஊடகவலையமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் அவர்களை தொடர்புகொண்டு  கேட்டது .

அதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்;

மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மூத்த சகோதரரான டாக்டர் ஹாபிஸ் நல்ல மனம்கொண்டவர் அனைவருடனும் அன்பாகப் பேசக்கூடியவர். 

அவர் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தினார் என்று வெளிவந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

இது டாக்டர் ஹாபிஸை மனதளவில்  பாதிக்கும் செய்தி என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -