மூத்த போராளி -
இச்செய்தியானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பூமுதீன் என்ற ஊடகவியலாளரினால் எழுதப்பட்டு சகல வலைத்தளங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குறித்த ஊடகவியலாளர் பூமுதீன் அமைச்சர் ரிசாத் அவர்களின் பக்கச்சார்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிடும் ஒருவர் என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.
மேற்படி விபரங்களிலிருந்து குறித்த செய்தியானது அமைச்சர் ரிசாத் அவர்களின் ஆசீர்வாதத்துடனே வெளியாகியுள்ளமையை குறிப்பிட்டுக்கூற வேண்டிய தேவையில்லை. வாசகர்களும் இதனை புரிந்து கொண்டமை இவ்விடயத்தில் நாடகமாட முனைந்த அமைச்சர் ரிசாத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானமாக மாற்றம் அடையத் தொடங்கியது.
இதேவேளை குறித்த செய்தியில் எவ்விதமான உண்மையுமில்லை, தனது கட்சிக்கும் தலைமைக்கும் நான் துரோகம் இழைக்க மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் உடனடியாகவே தனது மறுப்பறிக்கையில் தெரிவித்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
குறித்த செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், கட்சித் தலைமையும் மிகப்பெரிய அவமானத்தையும், இழுக்கையும் கேவலமாக பெற்றுக் கொள்ள நேரிட்டதை தாமதித்து உணர்ந்த அமைச்சர் ரிசாத் நேற்று உடனடியாக இச்செய்தியில் எவ்வித உண்மையில்லை எனத் தெரிவித்ததுடன், குறித்த செய்தி காரணமாக டாக்டர் ஹபீஸ் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துவதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹபீஸ் விடயத்தில் ரிசாத் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட முனைந்து தன் மீது தானே மண் அள்ளிப்போட்டுக் கொண்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
