மாடறுப்பதை தடைசெய்வதற்கு முன் மதுபானசாலை, சூதாட்ட நிலையங்களை மூடவும் - அமைச்சர் ஹக்கீம்

நாட்டில் மாடறுப்பது தடை செய்யப்படுவதற்கு முன்பு நாடெங்கிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்பட வேண்டும். மசுபானசாலைகளுக்கும் சூதாட்ட நிலையங்களுக்குமான அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டில் மாடறுப்பதை தடைசெய்வதற்கு முன்பு மதுபானசாலைகளும் சூதாட்ட நிலையங்களும் மூடப்பட வேண்டுமென்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மாத்திரம் ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்காது தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்த வேண்டுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று மாடறுப்பது தடைசெய்ய வேண்டும் என்று புதிய புரளியொன்று நாட்டில் உருவாகிவிட்டது. இந்த புதிய புரளியில் முஸ்லிம்கள் தம்மை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

மாடறுப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகும். 

முஸ்லிம்கள் இந்த இறைச்சி வர்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும் பாவனையாளர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே. முஸ்லிம்கள் நாம் நாட்டின் சனத்தொகையில் 10 வீதமே இருக்கிறோம்.

மாடறுப்பது தடைவிதிக்கப்படுவதால் முஸ்லிம்களின் சமயக்கடமைகள் சவாலுக்குள்ளாகின்றன என்பதை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும்.

அதே வேளை இதனை விட நாட்டிலுள்ள மதுபான சாலைகளினதும் சூதாட்ட நிலையங்களினாலும் ஏற்பட்டடு வருகின்ற சமூக சீரழிவுகளையும் அதன் விளைவுகளையும் ஜனாதிபதிக்கு விளக்க வேண்டும்.

இதற்கென சமூக நலனில் ஆர்வமுள்ள நாட்டுப்பற்றுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளையும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நல்ல நியாயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
ஏ.ஆர்.ஏ. பரீல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -