காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், (ஆசிரியர்) பிரதி அதிபரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்துவிட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே மாணவர் அவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை அக்மீமன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
