சாய்ந்தமருது: சிறுவர் பூங்காவின் உபகரணங்களை இனம்தெரியாதோர் அகற்ற முயற்சி...!

 எம்.வை.அமீர்-

சாய்ந்தமருது-02 கடற்கரை வீதியில் இருக்கும் சிறுவர் பூங்காவின் உபகரணங்களை இனம்தெரியாதோர் அகற்ற முயற்சி செய்துள்ளதாகவும் குறித்த பூங்காவின் சுற்று வேலியை சேதப்படுத்தியுள்ளதாகவும் அந்த பிரதேசத்தில் இருக்கும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பல்வேறு நிர்மாணப்பணிகளை செய்திருந்தனர். அந்த வகையில் சாய்ந்தமருது-02 கடற்கரை வீதியில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவர் பூங்கா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சிறுவர்களின் பொழுதுபோக்குக்கு பயன்பட்டிருந்த போதிலும் காலப்போக்கில் சரியான பரமரிப்பின்மையால் அழிவுற்று காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -