கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு - தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்

2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.


இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய முடிவுகளின் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் விபரங்கள்..

கணித பிரிவில் ரோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபெறுகளின்படி கணிதப்பிரிவில் கொழும்பு 7, ரோயல் கல்லூரியின் தசுன் ஜெயசிங்க என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில் கம்பஹா மாவட்ட மாணவி முதலிடம்

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி விஞ்ஞானப்பிரிவில், கம்பஹா ரட்னாவெலி மகளிர் வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

தெபுலி உமேஷா கருணாவலபா என்ற மாணவியே விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் குருணாகல் மாவட்ட முஸ்லிம் மாணவன் முதலிடம்

2015 ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி வர்த்தக பிரிவில் முதலிடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலம் பெற்றுள்ளது.

இதன்படி மலியதேவ வித்தியாலயத்தின் மாணவரான எப்.எம் அகில் மொஹமட் என்ற மாணவர் வர்த்தப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் குருணாகல் மாவட்ட மாணவி முதலிடம்

2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருணாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

ஜீவா நயனமாலி என்ற மாணவியே கலைப்பிரிவில் முதல் இடம்பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் மாணவர் ஜே.எம் மொஹமட் முன்சிப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வத்சலா சிறிவர்த்தன பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவில் இரண்டாம் இடத்தை குருணாகல் மலியதேவ வித்தியாலயத்தின் தனஞ்செய திஸாநாயக்க பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை இரத்தினபுரி சிவலி மத்திய கல்லூரியின் சச்சித் கஸ்தூரியாராச்சி பெற்றுள்ளார்.

வர்த்தகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தின் சதனி இரங்கா வித்தானகே பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை மொரட்டுவை சென் செபஸ்தியன் கல்லூரியின் ரன்தி ரமேஸ் சில்வா பெற்றுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -