கல்முனை பரக்கதுள்ளாவின் புத்தகம் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்க வேண்டும் - முபாறக்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ எம் பரக்கத் கல்முனை மாநகரம் பற்றிய நூலொன்றை எழுதி வெளியிட்டுள்ளர். இப்படியொரு நூலொன்றை தான் எழுதி வருவதாக சில வருடங்கள் முன் அவர் என்னிடம் சொன்னபோது அவரது எண்ணத்தை நான் பாராட்டினேன். ஆனாலும் எழுத்துலகோடு தொடர்பற்ற இவரால் இது கஷ்டமான காரியம் என்றே உள்மனது கூறியது.


ஆனாலும் இவரால் வெளியிடப்பட்ட மேற்படி நூலை நான் கண்ட போது உண்மையில் அதிர்ந்துதான் போனேன். கல்முனைக்குள் இத்தனை சாதனைமிக்க எழுத்தாளர்கள் உரவாகி வருகிறார்கள்;; என்ற உவகை ஏற்பட்டது.

தலைப்புக்கும் நூலில் உள்ள விடயங்களுக்கும் பொருத்தமான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதற்கான கடுமையான தேடல்களையும், வாசிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார். பெரும் பெரும் ஜாம்பவான்கள் செய்யத்துணியாத ஒன்றை பரக்கத் செய்து முடித்துள்ளமை கல்முனைக்கு மட்டுமல்ல ஏனைய ஊர்களுக்கும் எடுத்துக்காட்டாகும்.

மேற்படி நூலில் கல்முனையின் அரசியல் அதிகாரம் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருப்பதுடன் கல்முனை மாநகர சபையின் வரலாறு அதன் அங்கத்தவர்கள், அதன் குறிச்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்முனை பட்டிணசபையின் சுவடுகள் என பல விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துத்தந்துள்ளார். 

பரக்கத் ஒரு வயோதிபராயின் இதனை தொகுத்தது ஆச்சர்யமற்றதாக இருக்கும். ஆனால் ஒரு வாலிபரான பரக்கத்தின் இப்பணி இலேசுப்பட்டதல்ல. இது கல்முனையின் அனைத்து வாலிபர்களுக்கும் தேடலின் அவசியத்தையும் வாசிப்பின் அருமையையும் காட்டியுள்ளது.

அதே போன்று எதர் காலத்தில் கல்முனையின் வரலாறு பற்றியும் கல்முனை ஒரு முஸ்லிம் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த தனி அலகு போன்ற பல விடயங்களை பரக்கத் தனியொரு புத்தகமாகவும், அதே போல் கல்முனை அரசியலின் வரலாறு கல்முனைத்தலைமையில் உருவான கட்சிகள் அமைப்புக்கள் போன்றவற்றை உள்ளடக்கி பிறிதொரு நூலையும் அவர் எழுத வேண்டும் என அவா கொள்கிறேன்.

பரக்கத்தின் மேற்படி நூல் கல்முனை மாநகர சபை எல்லையுள் வாழும் அனைத்து மக்களின் வீடுகளிலும் இருப்பது அவசியமாகும். இதற்குரிய ஏற்பாட்டை கல்முனை மாநகர சபையும், கல்முனை வர்த்தக சங்கமும் ஏற்பாடு செய்து மேற்படி நூலின் ஒரு தொகுதியை விலை கொடுத்து பெற்று அதனை சகல பாடசாலைகள், வாசிகசாலைகள், உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

-மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைவர் முஸ்லிம் உலமா கட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -