இக்பால் அலி-
பொலன்நறுவை ஹைரிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் பொலன்நறுவை மாவட்டத்திலுள்ள அனாதைச் சிறார்களிலுள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு பொலன்நறுவை கதுருவெல ஹைரிய்யா அமைப்பின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை 2016-01-03 நடைபெற்றது.
மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் துவான் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ.சு.க அமைப்பாளரும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடைய முஸ்லிம்களின் பிரதிநிதியுமாகிய அல்ஹாஜ் எஸ் எம். பஸீர் அஹமட் அவர்களும் முஸ்லிம் கொளனி மர்கஸ் ஜும்மாபள்ளி தலைவர் அல்ஹாஜ் பீ. எம். பாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்ததைப் படங்களில் காணலாம்.


