அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இந்திய திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்திற்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் இந்திய நடிகர் ஸ்ரீகாந்த் அமைச்சரை சந்திப்பதற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நடிகர் ஸ்ரீகாந்துடன் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சினேகபூர்வ சந்திப்பொன்றினை தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (18) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




