இந்திய தமிழ்நாடு மீனவர்கள் 29 பேர் விடுதலை..!

எப்.முபாரக்-
லங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் இருபத்தொன்பது பேரையும் திருகோணமலை நீதிமன்றம், இன்று செவ்வாய் கிழமை(19) விடுதலை செய்துள்ளது.

குறித்த 29 மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்ளத்தின் அனுமதி, இன்று செவ்வாய் கிழமை(19) திருகோணமலை நீதிமன்றத்துக்கு கிடைக்கப்பெற்ற நிலையிலே குறித்த தமிழக மீனவர்கள் 29 பேரையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா விடுதலை செய்தார்.

குறித்த மீனவர்கள் 29 பேரும் திருகோணமலை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்று இந்தியா தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகளும் கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -