யாப்பு சீர்திருத்தங்களின்போது சிறுபான்மையினரின் அபிப்பிராயங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை - மௌலானா

ஏ.எம்.றிகாஸ்-
டந்த காலங்களில் எமது நாட்டில் ஆட்சியாளர்களினால் பல்வேறு சந்தரப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின்போது சிறுபான்மைச் சமூகங்களான தமிழர் மற்றும் முஸ்லிம்களின் அபிப்பிராயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அதேவேளை எதிர்கட்சிகள் எதிர்த்த வரலாறுகளே உண்டு என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூரிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏறாவூர் 6 டி கிராமிய அபிவிருத்திச் சங்கத்தலைவர் எஸ்எம் சுலைமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்ஐ தஸ்லிம் மற்றும் முன்னாள் அதிபர் ஏசிஎம் சயீட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - கடந்தகாலத்தில் சிறுபான்மைச் சமுகங்களை புறந்தள்ளி தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்செய்தநிலையில் அமுல்படுத்திய இருண்ட யுகத்தை எம்மால் மறக்க முடியாது. ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து இனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களும் பெற்றுக்கொண்டு அரசியல் யாப்பு சீர்திருத்தம் நடைபெறுகின்றமை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏதுவாக அமையுமென எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை முன்னிலைப் படுத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடசங்கற்பத்துடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -