பாகிஸ்தானின் சிறந்த உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு..!

அஷ்ரப் ஏ சமத் -
பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவினை மேலும் பலப்படுத்துமுகமாக 15.01.2016 வெள்ளிகிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சாலையில் பாகிஸ்தானின் சிறந்த உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியானது உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது .

இக்கண்காட்சியில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக உறவானது இவ்வாறான நிகழ்வுகள் மூலம் பலமடைவதுடன் அதே நேரத்தில் எமது நாட்டின் பல்வேறு வளங்களை கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் அவர்களது உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கும் முன்வரவேண்டும் எனவும் இம்மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கின் முதலீடு எனும் சர்வதேச அரங்கு பற்றியும் பாகிஸ்தான் தொழிலதிபர்களுக்கு தெரிவித்தார் .






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -