பொத்துவில் பிரதேசத்தில் சோளம்,நிலக்கடலை,மிளகாய் உத்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை.!

பொத்துவில் விவசாய விரிவாக்க நிலையத்திற்கு உட்பட்ட ஆத்திமுனைப் பிரதேசத்தில் சோளம் அறுவடை விழா கடந்த 2016 ஜனவரி 22 ம் திகதி விவசாயப் போதனாசிரியர் ஆ.ர்.ஆ சஜாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது அம்பாறை மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தின் லாகுகல வலயத்தின் விவசாய உத்தியோகத்தர் ஆ.ஐ இஸ்மாலெப்பை அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது இங்கு கருத்து தெரிவித்த விவசாய உத்தியோகத்தர்,

பொத்துவில் விவசாய விரிவாக்க நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்த வருடம் சுமார் சோளம் 62 ஏக்கரிலும், நிலக்கடலை 75 ஏக்கரிலும் மிளகாய் 37 ஏக்கரிலும் செய்கை பன்னப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் சோளம் அறுவடை விழாவுக்கு வருகை தந்த விவசாயிகளின் கோரிக்கையான பயிர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு நீர்ப்பம்பிகளையும், நீர்க்குழாய்களையும் Pளுனுபு திட்டத்தின் கீழ் பெற்றுத் தர முடியும் எனவும் தெரிவித்தார்.
எம்.சஜாத்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -