திருகோணமலையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள மாணவர் விடுதி வளாகம்..!

எப்.முபாரக்-
திருகோணமலை நகரிலுள்ள தேசிய தரத்திலான விவேகானந்தா கல்லூரியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களுடன் கூடிய மாணவர் விடுதி வளாகம் விடுதிக்காப்பாளர் இல்லாததால் முறையாக இயங்காத நிலையில் காணப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. 

உயர்கல்வி கற்பதற்காக திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகமம், மூதூர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, மற்றும் பன்குளம், கந்தளாய் போன்ற இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருப்பதால் தேவையற்ற செலவு பெற்றோருக்கு ஏற்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. 

இம்மாணவர் விடுதிக்கு விடுதிக்காப்பாளர் ஒருவரை உடனடியாக நியமித்து திருகோணமலை புறநகர்களிலிருந்து கல்வி கற்க வருகின்ற மாணவர்கள் 2016ஆம் ஆண்டு தொடக்கம் தங்கியிருந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கல்விச்சமூகம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரைக் கோரியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -