முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
மன் முசலித் தேசிய பாடசாலையில் முசலிக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தையுடைய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தனது நிதி மூலம் வழங்கிவைத்தார்.
அழியாச் செல்வம் கல்வியாகும். இது ஒன்றே எம்மானிட இனத்தை காக்கும் ஒரு பெரும் சக்தியாகும். 'கல்விக்கு உதவுவோர் காசினியில் உயர்வடைவர்.'
தனது உரையில் வடமாகாண தமிழ் முஸ்லிம் ஒற்றுமையிலும், கல்வி வளர்ச்சியிலுமே வடக்கின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றார்.
எதிர்காலத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களதும், சாதாரண தர ,உயர்தர பரீட்சைகளிலும் தோற்றவுள்ள மாணவர்களின் விருத்திற்காகவும் விஷேட திட்டங்கள் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் பௌண்டேசன் நாடு தழுவிய ரீதியில் 2015 ல் க.பொ.த. சாதாரண. தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு வழிகாட்டல் பரீட்சை வினாத்தாள் தொகுதிகள் வழங்கியது. இதற்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
அரசியல் வாதிகள் தம்மால் இயன்ற உதவிகளைப் பாடசாலைகளுக்கும் ,மாணவர்களுக்கும் செய்கின்றனர். இதனைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளை (வெளியீடுகளைப்) பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை சமூகத்திற்கு உரியது.


