அல் அக் ஷா விளையாட்டுக் கழகத்தின் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு..!

வாழைச்சேனை அல் அக் ஷா விளையாட்டு கழகத்தினால் வறிய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் காரியாலயம் திறப்பு விழாவும் 01.01.2016 வெள்ளிக் கிழமை பி.ப 4.30 மணியளவில் வாழைச்சேனை அந் நூர் தே.பாடசாலையின் கணணி ஆய்வு கூடத்தில் தலைவர் Sim இம்தியாஸ் தலைமையில் இடம் பெற்றது. 

இதில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் அல்ஹாஜ் MHM மீராமுகைதீன் JP அவர்களும் திட்டமிடல் அதிகாரி ஜனாப் றியாஸ் அவர்களும் பாடசாலை அதிபர் தாஹிர் அவர்களும் கலந்து கொண்டனர் இதில் மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் வழங்கி வைத்தார். 

இவ் அப்பியாச கொப்பிகளை அன்பளிப்பாக கொடுத்து உதவிய ஓட்டமாவடி ஸ்டைலிஷ் நிறுவனத்திற்கும் வாழைச்சேனை ஈஸ்டன் எலக்ரிக் மற்றும் ஜவாத் டெயிலரிங் நிறுவனத்தினருக்கும் அல் அக் ஷா வி.க சார்பாக நன்றிகளை கழக உறுப்பினர்களும் பொது மக்களும் தெரிவித்தனர்.

தகவல் இம்ரான் நிப்ராஸ்,
வாழைச்சேனை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -