மேற்கு பிரான்சில், மாரடைப்பினால் மயங்கிவிழுந்த தனது தந்தையை காப்பாற்றுவதற்காக, ஐந்து வயது சிறுவன் ஒருவன், இரவு நேரத்தில், மழையில் நனைந்துகொண்டே நீண்டதூரம் சைக்கிளில் சென்றுள்ளான்.
கெவின் என்ற அந்த சிறுவன், பல கிலோமீட்டர் தள்ளியுள்ள சான் பியே கோ என்ற சிறிய கிராமத்தில் வேலை செய்யும் அவனது தாயாரை அழைக்க முயன்றுள்ளான்.
வாகன ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுவனைக் கண்டு, அவசர உதவிச் சேவையை அழைத்துள்ளார்.
அவர்கள் அந்த சிறுவனின் வீட்டை தேடிப்பிடித்து, மாரடைப்பால் மயக்கமுற்ற அவனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த சிறுவனின் முயற்சியால் அவனது தந்தை உயிர் பிழைத்தார்.
