எப்.முபாரக்-
கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கொன்றினால் ஒருவரை சுட்டுக் கொலை செய்வதற்கு முயற்சித்து காயமேற்படுத்திய குற்றச்சாட்டு சந்தேக நபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத குறித்த சந்தேக நபரை அடுத்தமாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சசிமகேந்திரன் புதன்கிழமை (27)உத்தரவிட்டார்.
தற்போது வாகரை மத்தி,வாகரை பகுதியைச் சேர்ந்த ரத்தினசிங்கம் மைக்கல் நீல் வயது(46)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பப்பட்டுள்ளார்.
1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சந்தேக நபர் சேருநுவர பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் ஜெயராஜ் என்பவரை அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கினால் கொலை செய்வதற்கு முயற்சித்து காயம் ஏற்படுத்திய குறித்த சந்தேக நபர் பல வழக்குத்தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே குறித்த சந்தேக நபரை சேருநுவர பொலிஸார் புதன்கிழமை (27) கைது செய்து அன்றைய தினமே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
