அனுராதபுரம் நொச்சியாகம பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரையாக செல்ல வந்த 6 இளைஞர்கள் அட்டன் சிவில் பொலிஸாரால் 04.01.2016 அன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் புகையிரதத்தின் ஊடாக அட்டன் புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
அட்டன் புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த சிவில் பொலிஸார்கள் இவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யும் பொழுது இவர்களிடமிருந்து கஞ்சா கலந்த பாபுல் போதை பொருள் அடங்கிய 7 பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் 04.01.2016 அன்று அட்டன் நீதிமன்றத்தில் நீதவான் பிரசாத் லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தபட்டனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்பபுக்கொண்டதன் காரணமாக ஒருவருக்கு தலா 2500 ரூபா தண்டப்பணமாக விதித்ததோடு அவர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.
