எப்.முபாரக்-
காட்டுப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட யானைத் தந்தத்தை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 42 வயதுடைய பெண் ஒருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் 40,000 ரூபாய் அபராதம் திங்கட்கிழமை(11) விதித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி இப்பெண் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தந்தம் யானைத்தந்தமா என்பதை பரிசோதிப்பதற்காக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களத்துக்கு அந்த யானைத்தந்தம் அனுப்பி வைக்கப்பட்டது. அது யானைத்தந்தமென்று அத்திணைக்களம் அறிவித்ததை அடுத்து, இப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.