குளவிக்கொட்டு - 10 பேர் பாதிப்பு

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி தோட்ட பகுதியில் 27.01.2016 இன்று காலை வேளையில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் மட்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 9 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -