எம்.ஐ.சம்சுதீன்-
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடகமையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் திருகோணமலையில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படு கொலை செய்யப்பட்டு மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10வது ஆண்டு நிறைவஞ்சலி நிகழ்வு 24.05.2016ல் இன்று வை.எம்.சி.மண்டபத்தில் அருள் சஞ்சித் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதிகளாக கலந்து கொண்டிருக்கும் ஞாயிறு தினக்குரல் ஆசிரியரும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான பாரதிஇராஜநாயகம்,ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கத்தின் தலைவர் வியாழ்பெபிகமகே, லேக்கவுஸ் ஆசிரியர் பீட பிரதாணி சமன் வஹாராச்சி பிரதம ஆசிரியர் ஏ.எஸ்.எம்.நிஸாம், உழைக்கும் பத்திரிகை சங்கத் தலைவி கீர்த்தி அதிகாரி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாலேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




