அன்வரின் அதிரடி நடவடிகையும், மக்கள் காணிகள் ஒப்படைப்பும். அரசாங்க அதிபருக்கு நன்றி-அன்வர் MPC

புல்மோட்டை பொன்மலைகுடா அரிசிமலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு NEHRP திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் கடந்த 2010 ம் ஆண்டு காலபகுதியில் புல்மோட்டை கடற்படையினரால் ஆகிரமிக்கப்பட்டது.

 குறித்த பகுதிக்குள் அரிசிமலை பெளத்த மத குருவால் சட்ட விரோத கட்டடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டது, குறித்த பிரதேச செயலாளர் மற்றும் புல்மோட்டை போலீஸ் அதிகாரிக்கும் அரசாங்க அதிபரினால் கட்டட வேலைகளை நிறுத்த தொலைபேசியினூடாக பணித்ததுடன் குறித்த பாதிக்கப்பட்ட மக்களோடு 02.12.2015 ம் காலை 11.00 மணியளவில் திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஏற்பாட்டில் சந்தித்து குறித்த விபரம் எடுத்துக்கூறப்பட்டு உடனடி தீர்வாக அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான கடற்படை கட்டளை தளபதிக்கு 02.12.2015 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் குறித்த பாதிக்க பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக குறித்த பிரதேச செயலாளரிடம் கையளித்து பாதிக்க பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி மிக அவசரமாக அனுப்பி வைக்க பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்க அதிபருக்கு நன்றி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -