2015 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு துரைவி விருது வழங்கப்படவுள்ளது.தெரிவுச் செய்யப்படும் சிறந்த நூல் ஒன்றுக்கும் தலா 5000.00 ரூபாவும், விருதும், சான்றிதழும் வழங்கப்படும்.
கட்டுரைத் தொகுப்பு
கலை இலக்கிய விமர்சனம், ஆய்வு, கோட்பாடுகள் போன்ற வகையான ஆக்கங்கள்கொண்ட நூலாக இருத்தல் வேண்டும்.
மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு நூலின் மூலப்படைப்பு உலகின் எந்த மொழியிலும் வெளிவந்தாகவும் இருக்கலாம
விதிகள்
விருதுக்காக அனுப்பப்படும் நூல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN இலக்கம் பெற்று இருத்தல் வேண்டும்.
நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் இலங்கையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும.;
நூலாசிரியர்-மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரக் கொத்து, சமர்ப்பிக்கப்படும் நூலுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.
ஒவ்வொரு நூலின் மூன்று பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்
நாலின் பிரதிகள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 2016 ஆம் ஆண்டு ஜனவரி 10ந்திகதி முன்னதாக கீழ் காணும் விலாசத்திற்கு சேர்க்கப்படல் வேண்டும்.
முகவரி
Duraivi,
C/o Vijaya General Stores,
85, Wolfendhal Street,
Colombo-13.
மேலதிகத் தொடர்புகளுக்கு-மேமன்கவி-0778681464, துரைவி அலுவலகம்- 011-2327011, மின்னஞ்சல்- duraivi1931@gmail.com
