HNDA மாணவர்கள் பிரச்சினைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவு இதோ..!

ணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துமாறு வலியுறுத்தி மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். 

இவ்வாறு கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். 

இவ்வாறு மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -