க.கிஷாந்தன்-
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து 04.12.2015 இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சம்பவத்தை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக இச்சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.
நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்களும் நுவரெலிய அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நால்வரும் 13 -14 வயதுக்குட்பட்டவர்களாவர் என தெரியவந்துள்ளது.
