இன்று வாழைச்சேனை பிரதேசத்தில் அனைத்து மஹல்லாவுக்கும் உட்பட்ட பெண்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து கெளரவ கணக்கறிஞ்ஞர் H.M.றியாழ் அவர்கள் வாழைச்சேனை வைத்து கோதுமை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உருப்பினர் அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் வாழைச்சேனை ஹீரோ லயன்ஸ் விளையாட்டு கழக தலைவர் நவாஸ் அவர்களும் ஏனையோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இங்கு உரையாற்றிய எமது மண்ணின் மாற்றத்திக்கான தலைவன் கணக்கறிஞ்ஞன் H.M.றியாழ் அவர்கள் வாழைச்சேனை பிரதேசம் பல்வேறு பட்ட அபிவிருத்திகளிலும் பின்தங்கியுள்ள பிரதேசமாகும், இம்மக்கள் மீன்பிடியையே! வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றார்கள் அதுமத்திரமின்றி எது வித முன்னேற்றமும் இன்றி அல்லல் படுகிறார்கள்.
தனக்கு வழங்கப்படும் அரசியல் அந்தஸ்து மூலம் இம்மக்களில் குறைகளை நிபர்த்தி செய்து,சுய தொழில் வாய்புக்களை வழங்குவேன் என்று குறிப்பிட்டார்.
S.I.M.NIFRAS

