பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்படவிருந்த போதிலும், அரசாங்கத்தின் முக்கிய நபரின் அழுத்தம் காரணமாக அவர் கைது செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தும் நேரத்தில் கைது செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ள அந்த முக்கிய நபர், கடந்த 19 ஆம் திகதிக்கு பின்னர் சந்தேக நபரை கட்டாயம் கைது செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
வசீம் தாஜூடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட கப்டன் திஸ்ஸ என்ற நபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி என கூறப்படுகிறது.