கொழும்பில்.. சம்பந்தனுக்கும் சி.விக்கும் இடையில் இரகசிய சந்திப்பு...!

<<சற்றுமுன்>> 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெறுவதாக தெரியவருகிறது. 

பம்பலப்பிட்டி, இசிப்பத்தான வீதியில் உள்ள, தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் பிரபல சட்டத்தரணியுமான கனகஈஸ்வரன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பல மாதங்களாக வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சகட்டம் அடைந்திருந்த நிலையில், இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்களினால் வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று விக்னேஸ்வரனுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று வருகிறது.சந்திப்பு விபரங்கள் வெளியாகவில்லை எனவும் இம்போட் மிரர் விஷேட செய்தியாளர் கொழும்பு தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -