அமெரிக்காவில் பயங்கர சுழல்காற்று ஐம்பதாயிரம் வரையிலானோர் பாதிப்பு..!

மெரிக்காவில் கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது.

அவ்வுூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸுக்கு கிழக்கே மிஸ்ஸிஸிப்பி, டென்னெஸ்ஸி, அர்கன்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் சுூறாவளி வீசியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் மோச மான வானிலை சீற்றங்கள் ஏற்படலாம் என்றும் இதனால் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து வீடு திரும்பும் மக்கள், விமான நிலையத் தாமதங்கள், சாலையில் வெள்ளப்பெருக்கு போன்ற இடர்களைச் சந்திக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -