ஓடும் ரயிலின் கழிவறையில் பிரசவம் - தண்டவாளத்தில் தவறி விழுந்தது குழந்தை

த்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலின் கழிவறையில் நேபாள பெண் பெற்றெடுத்த குழந்தை, தண்டவாளத்தில் தவறி விழுந்தும் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நேபாளத்தின் கஞ்சன்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மோகன் நகரை சேர்ந்தவர் புஷ்பா தம்பா (வயது 40). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனாக்பூர்-பரேலி பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார்.

சிறிது தூரம் சென்றதும் புஷ்பா கழிவறைக்குச் சென்றுள்லார். அங்குவைத்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அங்கேயே குழந்தையை பெற்று உள்ளார். குழந்தை கழிவறையின் ஓட்டை வழியாக தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

இதை பார்த்த புஷ்பா கதறி அழுதார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ரெயிலை நிறுத்தினர். தண்டவாளத்தில் விழுந்த குழந்தை மீட்கபட்டது. தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -