வெள்ளக்காடானது சென்னை விமானநிலையம்..!

லத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியதால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

சென்னை நகரிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இடை விடாமல் கனமழை கொட்டியது. இரவிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்றும் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடானது. பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று வெளியூர்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரை இறங்குவதிலும், இங்கிருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் இன்று காலை வரை சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இன்று பகலிலும் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று இரவு கொட்டிய மழையால் ஓடுபாதை வெள்ளக்காடானது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நாளை காலை 6 மணி வரை விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லாது. அதேபோல் வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் வராது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -