கிழக்கு மாகாண சபை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியாமான தீர்மானங்கள்..!

30.11.2015 கிழக்கு மாகாண சபை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியாமான தீர்மானங்கள் தொடர்பாக முதலமைச்சரால் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (01.12.2015) முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

இதில்-

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 வழங்கப்படுதல் .

நாவலடியிலிருந்து கடற்படை முகாம் வாயில் வரையிலான வீதியினை காப்பெட் வீதியாக புனர்நிர்மாணம் செய்தல் .

மூதூர் மற்றும் திருக்கோவில் , அட்டாளைச்சேனை வைத்தியசாலைகளை A தரத்துக்கு உயர்த்துதல் .

கிண்ணியா வைத்தியசாலைக்கு தாதிகளுக்கான விடுதி அமைத்துக்கொடுத்தல் .

குச்சவெளி வைத்திய சாலையினை தள வைத்திய சாலையாக தரமுயர்த்தல் 

2015 இன் வரவுசெலவு திட்ட தொகையை விட 2016 வரவு செலவு திட்டத்தில் 969 மில்லியன் ரூபாய் விசேட திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 2016 க்கான கிழக்கு மாகாண நிதி 4232 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது .

விகிதாசார அடிப்படையை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிகளுக்கு அமர்த்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சரவை வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தினை கல்வி கல்லுரி தரத்தில் தரம் உயர்த்துதல் போன்றவைகளுக்கான அமைச்சரவை அங்கீகாரங்களும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -